இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரசூர் கூட்டுரோட்டில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update:2023-07-14 00:15 IST

திருவெண்ணெய்நல்லூர்:

அரசூர் கூட்ரோட்டில் இந்திய குடியரசு கட்சி சார்பில் மணிப்பூர் கலவரம் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு ஆகிய சம்பவங்களை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு இந்திய குடியரசு கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் இருவேல்பட்டு அ.குமார் தலைமை தாங்கினார். செய்தி தொடர்பாளர் நாராயணன், இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இணை பொதுசெயலாளர் மங்காபிள்ளை, நிர்வாகி கவுரிசங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

இதில் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மணிகுமார், துணை தலைவர்கள் சக்கரவர்த்தி, கணேசன், ஒன்றிய மாணவரணி தலைவர் ராஜேஷ், செயலாளர் கார்த்திக்பாலன் உள்பட பலர் கலந்து கொண்டு தலையில் காய கட்டுகளுடன் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். முடிவில் விழுப்புரம் நகர தலைவர் சிலம்பரசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்