தடுப்புகம்பி மீது ஜீப் மோதி 3 பேர் காயம்

அய்யலூர் அருகே தடுப்புகம்பி மீது ஜீப் மோதி 3 பேர் காயம் அடைந்தனர்.
தடுப்புகம்பி மீது ஜீப் மோதி 3 பேர் காயம்
Published on

கும்பகோணம் அருகே உள்ள பந்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 52). இவர், தனது நண்பர்களான மதிவாணன், பாலமுருகன் ஆகியோருடன் ஒரு காரில் கும்பகோணத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்றார். ஜீப்பை மதிவாணன் ஓட்டிச் சென்றார். நேற்று அதிகாலை திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் மூக்கரபிள்ளையார் கோவில் அருகே ஜீப் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையின் நடுவே இருந்த தடுப்பு கம்பி மீது பயங்கரமாக மோதியது. இதில் வடிவேல், மதிவாணன், பாலமுருகன் ஆகிய 3 பேரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com