கல்குவாரி லாரியை கிராம மக்கள் சிறை பிடிப்பு

கல் குவாரி லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
கல்குவாரி லாரியை கிராம மக்கள் சிறை பிடிப்பு
Published on

செய்யாறு

கல் குவாரி லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

செய்யாறு தாலுகா சிறுவேளியநல்லூர் கிராமத்தில் கல்குவாரி அமைந்துள்ளது. இங்கிருந்து அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மீறி அதிக பாரங்களுடன் கருங்கற்களை இரவு பகல் பாராமல் லாரியில் ஏற்றுக்கொண்டு அதி வேகமாக செல்கின்றனர். அதி வேகமாக செல்லும் பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

மேலும் லாரி செல்லும் புளியரம்பாக்கம் உள்பட கிராமப்புற சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறுகிறது. இதனால் பொதுமக்கள் ஆத்திரத்துடன் இருந்தனர். இந்த நிலையில் அந்த வழியாக குவாரியிலிருந்து அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரியினை புளியரம்பாக்கம் கிராம பொதுமக்கள் மடக்கி சிறை பிடித்தனர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக சிறைபிடித்த லாரியினை விடுவிக்காமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கல்குவாரி மேற்பார்வையாளர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த சாலை வழியாக லாரிகள் வரக்கூடாது என்றும், குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர். அவர்களை கல் குவாரி மேற்பார்வையாளர் சமரசம் செய்தார். இதனையடுத்து லாரியினை விடுவித்தனர். இச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.===========

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com