ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்

ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்
Published on

ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதற்கு ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 68 விவசாயிகள் 434 மூட்டை கொப்பரையை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கொப்பரை தேங்காய்களை தரம் பிரிக்கும் பணி நடந்தது. இதில், 201 மூட்டைகள் முதல் ரகமாகவும், 233 மூட்டைகள் 2-வது ரகமாகவும் தரம் பிரிக்கப்பட்டது.பொது ஏலத்தில் தாராபுரம், காங்கேயம், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு ரூ.70 முதல் ரூ.74 வரை ஏலம் விடப்பட்டது. 2-வது ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு ரூ.47 முதல் ரூ.65 வரை விற்பனையானது.கடந்த வாரத்தை விட 93 மூட்டைகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் கொப்பரை விலை கிலோவுக்கு ரூ.4 அதிகரித்துள்ளது.

இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com