கோத்தகிரி புளூமவுண்டன் அணி வெற்றி

மாவட்ட அளவிலான பி டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் கோத்தகிரி புளூமவுண்டன் அணி வெற்றி பெற்றது.
கோத்தகிரி புளூமவுண்டன் அணி வெற்றி
Published on

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பி டிவிஷன் பிரிவிற்கான லீக் போட்டியில் கேத்தி சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி அணியும், கோத்தகிரி புளூமவுண்டன் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கோத்தகிரி புளூமவுண்டன் அணி நிர்ணயிக்கப்பட்ட 25 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர்கள் சிவா 59 ரன்கள், விவேக் 54 ரன்கள், முருகன் 41 ரன்கள், பரத் 26 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து 150 பந்துகளில் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி அணி 21.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த அணி வீரர்கள் லோகேஸ்வரன் 42 ரன்கள், தயானந்த் 28 ரன்கள் எடுத்தனர். புளூமவுண்டன் அணியின் பந்து வீச்சாளர் பரத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் கோத்தகிரி புளூமவுண்டன் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 26 ரன்கள் எடுத்து, 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பரத் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com