மேலரசூர் கிராமத்தில் சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்

மேலரசூர் கிராமத்தில் சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேலரசூர் கிராமத்தில் சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்
Published on

புள்ளம்பாடி ஒன்றியம்மேலரசூர் கிராமத்தில்வள்ளி தெய்வானை, அம்பிகா சமேத சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 6.30 மணியளவில் மங்களஇசையுடன் வேதபாராயணம், பிரம்மசுத்தி, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து காலை 10 மணி அளவில் சுப்பிரமணியர் சாமி உள்ளிட்ட அனைத்து விமான கலசங்களுக்கும், 10,20 மணியளவில் மூலஸ்தான சுவாமிகளுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் மேலரசூர், கீழரசூர், ஆமரசூர், தென்னரசூர், வரகுப்பை, மால்வாய், எம்.கண்ணணூர், ஒரத்தூர், சரடமங்கலம், இலந்தகுடம், புள்ளம்பாடி, கல்லக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் இன்னிசை நிகழ்ச்சி, வான வேடிக்கை நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை காரியஸ்தர்கள், பொதுமக்கள், கோவில் குடிபாட்டு மக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com