7 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

7 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
7 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
Published on

7 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பாலியல் துன்புறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா அரியாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 45), கூலி தொழிலாளி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு 7 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கீழ்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேலுவை கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போச்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

10 ஆண்டு சிறை

இந்த நிலையில் இன்று இவ்வழக்கு கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். இதில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வேலுவிற்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். பின்னர் அவரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com