சாராயம் விற்ற பெண் குண்டர் சட்டத்தில் கைது

கீழ்வேளூர் அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சாராயம் விற்ற பெண் குண்டர் சட்டத்தில் கைது
Published on

கீழ்வேளூர் அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சாராய விற்பனை

நாகை வெளிப்பாளையம் வடக்கு பல்லியால் தோட்டம் பகுதியை சேர்ந்த மனோகரன் மனைவி முத்துலட்சுமி (வயது40). இவர் தேவூர் குயவர் தெருவில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இதுதொடர்பாக கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் அவர் மீது வழக்குகள் உள்ளன.

இதில் முத்துலட்சுமி கைது செய்யப்பட்டு திருவாரூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்கிற்கு பரிந்துரை செய்தனர்.

குண்டர் சட்டம்

இதையடுத்து குண்டர் சட்டத்தில் முத்துலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீசுக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார்.

அதன்படி கலெக்டர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதுதொடர்பான உத்தரவு நகலை கீழ்வேளூர் போலீசார் திருவாரூர் மகளிர் சிறை அதிகாரிகளிடம் வழங்கி, அங்கிருந்த முத்துலட்சுமியை நேற்று திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com