லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

ஜோலார்பேட்டையில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
Published on

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொன்னேரி கூட்ரோடு அருகே உள்ள டீக்கடையில் ஒருவர் சந்தேகப்படும்படி இருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனையடுத்து அவரை சோதனை செய்ததில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 84 வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் (வயது 42) என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com