'தினத்தந்தி' செய்தி எதிரொலி காரணமாக தொப்பம்பட்டி பள்ளியில் பராமரிப்பு பணி

'தினத்தந்தி' செய்தி எதிரொலி காரணமாக தொப்பம்பட்டி பள்ளியில் பராமரிப்பு பணி நடைபெற்றது.;

Update:2022-07-21 19:51 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 80 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவ-மாணவிகளை வேறு கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்து வகுப்புகள் நடத்தப்படுகின்றது.

இந்த நிலையில் பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்வதோடு சரி அதன்பிறகு பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில்லை என்று தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதையடுத்து உடனடியாக பள்ளியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வடக்கு ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதை தொடர்ந்து தற்போது பள்ளி வளாகத்தில் சேதமடைந்த பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளியில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வர்ணம் பூசி கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்