ஆட்டோவில் பேட்டரி திருடியவர் கைது

ஆட்டோவில் பேட்டரி திருடியவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-07-10 00:30 IST

நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவர் உமர் (வயது 36). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவரது ஆட்டோவில் இருந்த பேட்டரியை மர்மநபர் திருடி சென்றார். இதுகுறித்து உமர் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இப்ராகிம் (35) என்பவர் பேட்டரி திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, இப்ராகிமை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்