மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது

கயத்தாறு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது
மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது
Published on

கயத்தாறு:

கயத்தாறு அருகே பன்னீர்குளம் கிராமத்திற்கு கீழ்புறத்தில் பன்னீர்குளம்-அரியவன்பட்டி செல்லும் சாலையில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பெண்ணின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த பெண் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என தெரிகிறது.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்த அந்த பெண் சிவகங்கை வலையூரான்பட்டியை சேர்ந்த ராஜாமணி என்பவருடைய மனைவி சித்ரா (வயது 45) என்பது தெரியவந்தது. அவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகன்களும் உள்ளனர். மதுரை மேலூரை சேர்ந்த ஒருவருடன் சித்ரா டிராக்டர் வாங்க வந்ததாக கூறப்படுகிறது. எனவே வந்த இடத்தில் பணத்திற்காக அவரை கொலை செய்தனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com