நுங்கம்பாக்கம் போலீஸ் சரகத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் 96 கண்காணிப்பு கேமராக்கள்

நுங்கம்பாக்கம் போலீஸ் சரகத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் 96 கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார்.

Update: 2023-03-12 07:44 GMT

சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் சரகத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 96 கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை கமிஷனர் தீஷா மிட்டல், துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த அதிநவீன கேமராக்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறியவும், காட்சிகள் மற்றும் வாகனங்கள் எண்களை துல்லியமாக படம் எடுத்து கொடுக்கும். வயர்கள் இல்லாமல் சிப் மூலமாக காட்சிகளை பதிவு செய்யும்.

20 நாட்கள் வரையில் காட்சி பதிவுகளை சேமிக்கும் வசதி உடையது. இந்த கேமராக்களை சேதப்படுத்தினாலோ, இயக்கத்தை நிறுத்தினாலோ உடனடியாக 'இ-மெயில்' மூலம் தகவல் தெரிந்து விடும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்