சென்னை பர்மா பஜாரில் வாடகை பாக்கி செலுத்தாத 45 கடைகளுக்கு சீல் - அதிகாரிகள் நடவடிக்கை

வாடகை பாக்கி வைத்துள்ள 45 கடைகளுக்கு முதற்கட்டமாக இன்று சீல் வைக்கப்பட்டது.
சென்னை பர்மா பஜாரில் வாடகை பாக்கி செலுத்தாத 45 கடைகளுக்கு சீல் - அதிகாரிகள் நடவடிக்கை
Published on

சென்னை,

சென்னை பாரிமுனையில் உள்ள பர்மா பஜாரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை மாநகராட்சி நிர்வாகம் வாடகைக்கு விட்டுள்ளது. இதில் 375 கடைகளைச் சேர்ந்த வியாபாரிகள் சுமார் 75 லட்சம் ரூபாய் வரை வாடகை பாக்கி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் 25 லட்சம் ரூபாய் வரை வாடகை பாக்கி வைத்துள்ள 45 கடைகளுக்கு முதற்கட்டமாக இன்று சீல் வைக்கப்பட்டது. மீதம் உள்ள 330 கடைகளுக்கு விரைவில் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பர்மா பஜாரில் உள்ள ஒவ்வொரு கடைக்கும் மாதம் தோறும் ரூ.1,100 வாடகை வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com