நாளை மின்சாரம் நிறுத்தம்

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளை மின்சாரம் நிறுத்தம்
Published on

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருதுநகர்

விருதுநகர் உள் அரங்கு துணைமின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

ஆதலால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான ராமமூர்த்தி ரோடு, கம்மாபட்டி, பட்டேல் ரோடு, பேராலி ரோடு, ஸ்டேட் பேங்க் காலனி, தந்திமர தெரு, ரயில்வே பீடர் ரோடு, சாஸ்திரி நகர், காந்திபுரம் தெரு, மெயின் பஜாரில் தெப்பம் வரை, காசுக்கடை பஜார், மணி நகரம், கந்தபுரம் தெரு, பேராசிரியர் காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

மல்லாங்கிணறு

அதேபோல மல்லாங்கிணறு துணை மின் நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

ஆதலால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான மல்லாங்கிணறு, வலையங்குளம், நந்திக்குண்டு, மேல துலுக்கங்குளம், அழகியநல்லூர், வில்லிபத்திரி, நாகம்பட்டி, வழுக்கலொட்டி, வரலொட்டி மற்றும் அதனை சுற்றியுள்ளபகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் பாபு கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com