தேனூர்-கீழப்பெரம்பலூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

தேனூர்-கீழப்பெரம்பலூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தேனூர்-கீழப்பெரம்பலூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
Published on

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தேனூர், கீழப்பெரம்பலூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் புதுவேட்டக்குடி, காடூர், நமங்குணம், கீழப்பெரம்பலூர், கோவில்பாளையம், தேனூர், துங்கபுரம், குழுமூர், ஆர்.எஸ்.மாத்தூர், கே.ஆர்.நல்லூர், அங்கனூர், அகரம்சீகூர், வயலூர், வயலப்பாடி, கிளியப்பட்டு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது, என்று குன்னம் உதவி செயற்பொறியாளர் கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com