அவதூறு வழக்கு: பிரேமலதா விஜயகாந்த் விடுதலை - கோபி கோர்ட் தீர்ப்பு

கோபி கோர்ட்டில் ஆஜரான பிரேமலதா விஜயகாந்த் விடுதலை செய்யப்பட்டதாக நீதிபதி உத்தரவிட்டார்.

Update: 2022-07-18 07:55 GMT

ஈரோடு:

கடந்த 2014 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட தினேஷ்குமார் என்பவரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் கோபிசெட்டி பாளையம் பஸ் நிலையத்தில் பிரசாரம் செய்தார்.

அப்போது வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த போது பிரேமலதா விஜயகாந்த், அதிமுக சுற்றுசூழல் துறை அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலத்தை அவதூறாக பேசியதாகவும், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக பேசிதாக, அதிமுக கோபி நகர செயலாளராக இருந்த சையதுபுடான்சா என்பவர் புகார் கொடுத்தார்.

இது குறித்தான வழக்கு கோபி ஜூடீசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 2014ம் ஆண்டு முதல் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நீதிபதி விஜய் அழகிரி முன்பு பிரேமலதா விஜயகாந்த் ஆஜரானார்.

அதைத் தொடர்ந்து அவர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி விஜய் அழகிரி தீர்ப்பு கூறினார். கோட்டில் இருந்து அவர் வெளியே வந்த பொழுது கோர்ட் முன்பாக கூடியிருந்த தேமுதிகவினர் பட்டாசு வெடித்து அதை கொண்டாடினார்கள்

Tags:    

மேலும் செய்திகள்