அ.தி.மு.க. அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்; போலீஸ் கமிஷனரிடம் ஜெயக்குமார் மனு

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் சங்கர் ஜிவாலை மாலையில் சந்தித்து மனு அளித்தார்.;

Update:2023-03-18 18:39 IST

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்து பொதுச்செயலாளர் தேர்தல் பதவிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்ய இருப்பதாக பரபரப்பு தகவல் பரவியது.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் சங்கர் ஜிவாலை மாலையில் சந்தித்து மனு அளித்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகைக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வருகை தர இருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளது. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தோம். அவரும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

ஏற்கனவே அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சூறையாடிய நிகழ்வு நடைபெற்று இருக்கிறது. மறுபடியும் அதுபோன்ற நிகழ்வு நடந்து விடக் கூடாது என்பதற்காக இந்த மனுவை அளித்துள்ளோம்" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்