சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் மறியல்

சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் மறியல்
Published on

மதுரை மாநகரின் முக்கிய பகுதியான செல்லூர்-குலமங்கலம் சாலையில் கடந்த 2 மாதங்களாக பாதாளச்சாக்கடை, குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் அந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதுமட்டுமின்றி மழை காலங்களில் அந்த வழியாக வாகனங்களில் செல்ல முடியாத நிலையும் உள்ளது. இதன் வழியாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்ல வேண்டியது இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் அந்த சாலையை கடந்து செல்கின்றனர். இந்தநிலையில், செல்லூர்- குலமங்கலம் சாலையை சீரமைக்கக்கோரி, அப்பகுதி மக்கள் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் நேற்று குலமங்கலம் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com