தர்மபுரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயிலின் தாக்கம் தொடங்கியது. 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்த வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக சற்று குறைந்துள்ளது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்தது. இதனால் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்மட்டம் சற்று அதிகரித்துள்ளது.
இதேபோல் சில பகுதிகளில் நிலத்தடி நீரும் சற்று உயர்ந்துள்ளது. விவசாய சாகுபடி பணிகளுக்கு பயன்படும் வகையில் மழை பெய்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக சாகுபடி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.