பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும் பணி
சேரன்மாதேவியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும் பணி நடைபெற்றது.;
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சேரன்மாதேவி ரெயில் நிலையத்தில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் கல்லூரி முதல்வர் மணிமாறன், நிர்வாக அலுவலர் சித்திரை சங்கர், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சங்கர் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.