ஊரகவளர்ச்சி துறை அலுவலர்கள் போராட்டம்

ஊரகவளர்ச்சி துறை அலுவலர்கள் போராட்டம் நடத்தினர்.;

Update:2023-07-07 00:15 IST

தொண்டி, 

திருவாடானை யூனியன் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்தை முடக்கும் வகையில் அனைத்து நிலை ஊழியர்களையும் ஒரே நேரத்தில் பணிமாறுதல் செய்யப்பட்டதை கண்டித்தும், அந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக ஒட்டுமொத்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நேற்று யூனியன் அலுவலகம் அலுவலர்கள், பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்