மாநில அளவில் பெண்களுக்கான கோகோ போட்டியில் சேலம் அணி சாம்பியன்

மாநில அளவில் பெண்களுக்கான கோகோ போட்டியில் சேலம் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
மாநில அளவில் பெண்களுக்கான கோகோ போட்டியில் சேலம் அணி சாம்பியன்
Published on

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரம் ஒன்றியம் சோபனபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான பெண்களுக்கான கோகோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு கோகோ கழகம் மற்றும் திருச்சி மாவட்ட கோகோ கழகம் இணைந்து நடத்திய இந்த போட்டியில் சென்னை, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, காஞ்சீபுரம், மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருவாரூர், தென்காசி, திருவள்ளூர், திருச்சி, சென்னை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, தேனி, புதுக்கோட்டை ஆகிய 17 மாவட்ட அளவிலான கோகோ அணிகள் கலந்து கொண்டன. நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் பகல்- இரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டிகளில் ஒரு அணியில் 12 பேர் என 204 பெண்கள் பங்கேற்றனர்.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடயங்களுடன், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதில் முதல் பரிசான ரூ.5 ஆயிரம் சேலம் அணிக்கும், இரண்டாவது பரிசாக ரூ.4 ஆயிரம் கிருஷ்ணகிரி அணிக்கும், மூன்றாவது பரிசாக ரூ.3 ஆயிரம் மதுரை மற்றும் தஞ்சாவூர் அணிகளுக்கும் வழங்கப்பட்டன. இதில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com