சந்தனக்கூடு திருவிழா

இடையக்கோட்டை அருகே தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
சந்தனக்கூடு திருவிழா
Published on

இடையக்கோட்டை அருகே உள்ள குளிப்பட்டி மஹான் சேக்பரீத் ஒலியுல்லா என்ற சக்கரைபாவா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு இஸ்லாமிய இன்னிசை கச்சேரி விடிய விடிய நடந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் தர்காவை மலர்களால் அலங்கரித்து வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து சந்தனகுடம் அலங்கரிக்கப்பட்டு தர்காவை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் தர்காவில் சிறப்பு வழிபாடு நடத்தி, சந்தனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் திண்டுக்கல், திருச்சி, மதுரை, கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து கலந்து கொண்டனர். விழாவையொட்டி ஒட்டன்சத்திரத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com