பிளஸ்-2 மாணவியை முத்தமிட்ட வாலிபர், போக்சோவில் கைது

மயிலாடுதுறை அருகே பஸ் நிறுத்தத்தில் பிளஸ்-2 மாணவியை முத்தமிட்ட வாலிபர், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பிளஸ்-2 மாணவியை முத்தமிட்ட வாலிபர், போக்சோவில் கைது
Published on

மயிலாடுதுறை;

மயிலாடுதுறை அருகே பஸ் நிறுத்தத்தில் பிளஸ்-2 மாணவியை முத்தமிட்ட வாலிபர், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

மாணவிக்கு முத்தம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவை சேர்ந்தவா ஜெய்சங்கர். இவருடைய மகன் ஜெயப்பிரகாஷ்(வயது 25). இவர் பிளஸ்-2 வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவியை ஜெயப்பிரகாஷ் கட்டிப்பிடித்து முத்தமிட்டதாக கூறப்படுகிறது.

போக்சோவில் கைது

இதை சற்றும் எதிர்பாராத அந்த மாணவி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே அங்கிருந்து ஜெயப்பிரகாஷ் ஓடி விட்டார்.இது குறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெயப்பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com