பழுதடைந்த சூரிய மின்விளக்குகள்
பழுதடைந்த சூரிய மின்விளக்குகளை சரிசெய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
தளி
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொருப்பாறு, ஆட்டு மழை, ஈசல்தட்டு, தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல், மஞ்சம்பட்டி, குருமலை, குளிப்பட்டி, மாவடப்பு, மேல்குருமலை, கருமுட்டி, முள்ளுப்பட்டி, பூச்சகொட்டாம்பாறை, காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள்.
இங்கு அமைக்கப்பட்ட சோலார் விளக்குகள் சேதம் அடைந்து விட்டது. இதனால் இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க இயலவில்லை. அதை சீரமைத்து தர வேண்டும்என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.