சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது
சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Published on

ராஜபாளையம்,

மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மாயூரநாத சுவாமி கோவில், கருப்ப ஞானியார் கோவில், அருணாச்சலேஸ்வரர் கோவில், குருசாமி கோவில், பறவை அன்னம் காத்தருளிய சாமி கோவில் ஆகிய கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக நந்திக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதேபோல ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் தவநந்தி கண்டீஸ்வரர் கோவில், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில், வாழவந்தாள்புரம் மன்மத ராஜலிங்கேஸ்வரர் கோவில், தெற்கு வெங்கநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோவில், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரர் கோவில், அயன் கொல்லம் கொண்டான் வீரபாண்டீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருச்சுழி

திருச்சுழி திருமேனி நாதர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு பால், சந்தனம், மஞ்சள், உள்பட 9 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து திருமேனிநாதர், துணைமாலை அம்மன் சுவாமி வீதி உலா நடந்தது. திருச்சுழி அருகே பாறைக்குளம் கைலாயநாதர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com