போடி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

போடி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
போடி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
Published on

போடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் முத்தையா (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் அவருக்கு நோய் குணமாகவில்லை.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது விஷத்தை குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்தையா உயிரிழந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com