அனைத்து மருந்து கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள்-கலெக்டர் உத்தரவு

அனைத்து மருந்து கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து மருந்து கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள்-கலெக்டர் உத்தரவு
Published on

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் மற்றும் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்தகங்களிலும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்படும் நேற்று முதல் வருகிற 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் அல்லது மருந்து ஆய்வாளர் ஆய்வின் போது கண்டறியப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com