கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

நெல்லை மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வைரவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலப்பாளையம் பி.டி. காலனி பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் அதே பகுதியை சேர்ந்த ஜலாலுதீன் மகன் கடாகஜா (வயது 35) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com