பைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

பைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

Update: 2023-10-06 22:48 GMT

தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் உள்ள காலபைரவருக்கு பால், தயிர் பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டன.

இதேபோல் கோபி அருகே பாரியூர் அமரபணீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவர், மொடச்சூர் சோமேஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவர், கோபி ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர், கோபி அய்யப்பன் கோவிலில் உள்ள காலபைரவர் மற்றும் கோபி பகுதியில் உள்ள கால பைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோபி அருகே கூகலூரில் உள்ள மீனாட்சி அம்பிகா சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு மலர்களாலும், வடைகளாலும் மாலை சாத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்