வேடசந்தூர் போலீஸ் குடியிருப்பு விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

வேடசந்தூர் போலீஸ் குடியிருப்பில் உள்ள விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-07-13 16:57 GMT

வேடசந்தூர் போலீஸ் குடியிருப்பில் ஐஸ்வர்ய விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் மற்றும் முளைப்பாரி ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது. அதனைத்தொடர்ந்து அஷ்டபந்தன மருந்து சாத்துதல், கோபுர கலச பிரதிஷ்டை, சுவாமி கண் திறப்பு ஆகியவை நடந்தது.

இந்தநிலையில் இன்று காலை 108 ஹோம திரவியங்கள், பழவகைகள், நவதானியம், நவக்கிரகத்துடன் ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. மேலும் ஐஸ்வர்ய விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது.

இதில் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன் (வேடசந்தூர்), சத்தியபிரபா (எரியோடு), தங்கப்பாண்டி (வடமதுரை), மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்