பெண் மாயம்

பெண் மாயமானார்.
பெண் மாயம்
Published on

ஜெயங்கொண்டம் அருகே உள்ள குருவாலப்பர்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் ஜெயந்தி மாலா(வயது 27). இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர், பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள், தோழிகளின் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் தேடியும், அவர் கிடைக்கவில்லை. இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ஜெயந்தி மாலாவின் சகோதரர் மணிமாறன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஜெயந்தி மாலாவை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com