வைக்கோல் படப்பு தீயில் எரிந்து நாசம்
வைக்கோல் படப்பு தீயில் எரிந்து நாசமானது.;
காரியாபட்டி,
நரிக்குடி அருகே உள்ள என்.முக்குளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஜலாலுதீன் (வயது50). விவசாயியான இவர் வீட்டில் மாடுகளை வாங்கி வளர்த்து வருகிறார். இந்தநிலையில் மாடுகளுக்கு தேவையான தீவனமாக வைக்கோல் கட்டுகளை வாங்கி வீட்டின் பின்புறமாக அடுக்கி வைத்துள்ளார். சம்பவத்தன்று ஜலாலுதீன் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக என்.முக்குளம் பகுதியிலுள்ள வயலுக்கு அழைத்து சென்றார். இவருடைய மனைவி சூரத்கனியும் 100 நாள் வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜலாலுதீன் மதியம் வீட்டிற்கு வந்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போதுவீட்டின் பின்புறத்தில் இருந்து புகை மண்டலமாக காட்சியளித்ததுடன் கருகும் வாடையும் வந்தது. உடனே அவர் வெளியே வந்து பார்த்த ேபாது வைக்கோல் கட்டுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சுழி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முனீஸ்வரன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் விைரந்து வந்து தீயை அணைத்தனர். இதில் வைக்கோல் படப்பு தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.