தூத்துக்குடியில் வீட்டில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது -டிரைவர் காயம்

தூத்துக்குடியில் வீட்டில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்ததில் டிரைவர் காயம் அடைந்தார்
தூத்துக்குடியில் வீட்டில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது -டிரைவர் காயம்
Published on

தூத்துக்குடியில் வீட்டில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்ததில் டிரைவர் காயம் அடைந்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

டிரைவர்

தூத்துக்குடி அன்னை இந்திரா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சேலைபெருமாள் (வயது 50). டிரைவர். இவர் தனது தாய் வெள்ளையம்மாள் (81) என்பவருடன் வசித்து வருகிறார்.

 மதியம் சோலைபெருமாள் வீட்டில் இருந்தார். அப்போது, வெள்ளையம்மாள் பக்கத்து வீட்டுக்கு சென்று இருந்தார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் வீட்டின் உள்பகுதி முழுவதும் கியாஸ் பரவி இருந்தது.

தீப்பிடித்தது

அப்போது சோலைபெருமாள் வீட்டின் உள்ளே இருந்து பீடியை பற்ற வைத்து உள்ளார். உடனே வீட்டில் பரவி இருந்த கியாஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில் சேலை பெருமாள் பலத்த காயம் அடைந்தார். இந்த வெப்பம் காரணமாக வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பலத்த காயம் அடைந்த சோலைபெருமாள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com