கடைக்காரரை மிரட்டி பணம் பறித்தவர் கைது

பள்ளிபாளையம் அருகே கடைக்காரரை மிரட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
கடைக்காரரை மிரட்டி பணம் பறித்தவர் கைது
Published on

பள்ளிபாளையம்:-

பள்ளிபாளையம் அருகே வெப்படையை சேர்ந்தவர் சரவண பிரியன் (வயது 36). இவர், வெப்படையில் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். ஈக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் கவுரிசங்கர் (26) என்பவர், சரவண பிரியன் கடைக்கு சென்று கடன் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுக்கவே, ஜாமீனுக்கு ஆட்களை காண்பிப்பதாக கூறி சரவண பிரியனை, கவுரிசங்கர் காரில் அழைத்து சென்றுள்ளார். பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து சரவணபிரியன் ஏ.டி.எம்.மில் இருந்து ரூ.70 ஆயிரத்தை எடுக்க வைத்து மிரட்டி அதனை பறித்துக்கொண்டு கவுரிசங்கர் நண்பர்களுடன் தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுரிசங்கரை கைது செய்தனர். தலைமறைவான அவருடைய நண்பர்களை தடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com