போலீஸ்காரர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி மிரட்டல்- வாலிபர் சிக்கினார்

பேய்க்குளத்தில் போலீஸ்காரர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி மிரட்டல்-வாலிபர் சிக்கினார்
போலீஸ்காரர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி மிரட்டல்- வாலிபர் சிக்கினார்
Published on

சாத்தான்குளம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்கு வந்த மீரான்குளத்தை சேர்ந்த அப்பாத்துரை மகன் அஜய்ஜெனீஸ் (வயது 21), அவரது நண்பர்கள் உள்ளிட்ட 12 பேர் போலீஸ்துறை சார்பில் வைத்திருந்த தடுப்பை (பேரிகார்டு) அகற்றிவிட்டு, மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றதாகவும், இதை எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸ்காரர் விக்ராந்த் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜய்ஜெனீஸ், அவர் மீது மோட்டார் சைக்கிளால் மோதியதுடன் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து விட்டு சென்றாராம். இதில் விக்ராந்துக்கு இடது காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பற்றார்.

இது குறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபநேசர் வழக்குப்பதிவு செய்து அஜய்ஜெனீஸை கைது செய்தார். மேலும் 11 பேரை சாத்தான்குளம் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com