மாணவியை கடத்திய வாலிபர் கைது

பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்
மாணவியை கடத்திய வாலிபர் கைது
Published on

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த மாணவி கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து அவரது தாய், ஒரத்தநாடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த மாணவிக்கும், திருப்பூர் மாவட்டம் ரெங்க கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் குருபிரசாத் (வயது 23) என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்திச்சென்று உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்ததும் தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியையும், குருபிரசாத்தையும் பிடித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் மகளிர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குரு பிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com