நாகர்கோவில் பஸ் நிலையத்தில் தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த வாலிபர்

நாகர்கோவில் பஸ் நிலையத்தில் தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் தப்பி ஓடினார். அந்த நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
நாகர்கோவில் பஸ் நிலையத்தில் தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த வாலிபர்
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் பஸ் நிலையத்தில் தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் தப்பி ஓடினார். அந்த நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பணம்-செல்போன் பறிப்பு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30). இவர் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் தங்கி, ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை செந்தில்குமார் வடசேரி பஸ் நிலையத்திற்கு டீ குடிக்க சென்றார்.

அப்போது அவரை ஒரு வாலிபர் வழிமறித்து கட்டையை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.3,500 ரொக்கம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு ஓடினார். உடனே செந்தில்குமார் திருடன்...திருடன்... என கூச்சலிட்டார்.

வாலிபர் கைது

அதைத்தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் ஓடி சென்று வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் இதுபற்றி வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் வடசேரி பரதர் தெருவை சேர்ந்த கவின் (22) என்பதும், செந்தில்குமாரிடம் பணம் மற்றும் செல்போனை பறித்ததும் தெரியவந்தது. அதை தொடர்ந்து கவினை வடசேரி போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com