விழுப்புரம் கோர்ட்டுக்கு வந்தவர்களுக்கு கொலை மிரட்டல்

வழக்கு விசாரணைக்காக விழுப்புரம் கோர்ட்டுக்கு வந்தவர்களுக்கு கொலை மிரட்டல் வாலிபர் மீது வழக்கு
விழுப்புரம் கோர்ட்டுக்கு வந்தவர்களுக்கு கொலை மிரட்டல்
Published on

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் தாலுகா டி.எடையார் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் அன்பு (வயது 23). இவருடைய தம்பி அருண் என்பவரை அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் சரத் என்கிற சரத்ராஜ் (22) என்பவர் கடந்த 2022-ல் கொலை செய்தார். இவ்வழக்கின் விசாரணைக்காக நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்திற்கு அன்பு மற்றும் அவரது குடும்பத்தினர் வந்தனர். பின்னர் அவர்கள் வெளியே சென்றபோது நீதிமன்ற நுழைவுவாயில் அருகே அங்கு வந்த சரத்ராஜ், என்னையே கோர்ட்டுக்கு வர வைத்து வீட்டீர்களா, உங்களை விட மாட்டேன், அடுத்த விசாரணைக்குள் உங்களை கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அன்பு, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சரத்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com