ஓடும் பஸ்சில் வியாபாரி மரணம்; சென்னையில் மகளை பார்க்க வந்தபோது பரிதாபம்

சென்னையில் மகளை பார்க்க வந்தபோது ஓடும் பஸ்சில் வியாபாரி மரணம் அடைந்தார்.
ஓடும் பஸ்சில் வியாபாரி மரணம்; சென்னையில் மகளை பார்க்க வந்தபோது பரிதாபம்
Published on

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை (வயது 56). பழைய இரும்பு வியாபாரியான இவர், சென்னை எர்ணாவூரில் உள்ள மகள் விஜயராணி வீட்டுக்கு நேற்று முன்தினம் தென்காசியில் இருந்து தனியார் பஸ்சில் வந்தார்.

நேற்று காலை பஸ் எர்ணாவூர் அருகே நின்றபோது வெள்ளத்துரை பஸ்சில் படுத்து கிடந்தார். உடனே அவரை அழைத்துச்செல்ல வந்த அவருடைய மருமகன் மோகன், பஸ்சில் ஏறிச்சென்று பார்த்தபோது வெள்ளத்துரை பஸ்சில் பிணமாக கிடந்தார்.

உடனே அவரை கீழே இறக்கி சாத்தாங்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளத்துரையின் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com