தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலை

தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது.
தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலை
Published on

வாசுதேவநல்லூர்:

குடியரசு தின விழாவையொட்டி, புளியரை பஸ் நிறுத்தத்தில் பா.ஜ.க. வெளிநாடு அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் தென்காசி ஆனந்தன் தேசிய கொடி ஏற்றினார். புளியரை ஊராட்சி மன்றத்தில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் இலவச வேட்டி சேலை வழங்கினார். பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் பால்ராஜ், புளியரை பா.ஜ.க. தலைவர் ஷாம், இளைஞர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் சங்கரநாராயணன், கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் செல்வகணபதி, பட்டியல் அணி மாவட்ட தலைவர் குமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தவணை முருகேசன், ஒன்றிய பொதுச்செயலாளர் மாரியப்பன், ஒன்றிய செயலாளர் ராமர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com