மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
Published on

குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, வீடு, குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் மனுகொடுத்தனர். மொத்தம் 265 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவி

கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் மற்றுத்திறனாளிகள் ஈமச்சடங்கு நிதி உதவி தலா ரூ.17 ஆயிரம் வீதம் 26 மாற்றுத் திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு ரூ.4 லட்சத்து 42 ஆயிரத்திற்கான காசோலை, 3 நபர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஒருவருக்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் மோட்டார் பொருந்திய பேட்டரி ஸ்கூட்டர்ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

கல்லூரி மாணவி ஒருவருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை, குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்த ஒருவருக்கு உடனடியாக கலெக்டரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.6000 மதிப்பில் தையல் எந்திரமும் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, துணை கலெக்டர் வள்ளி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com