வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் பயன்பாட்டிற்கு வருமா?

வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2023-07-08 18:45 GMT

ஓராண்டுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம்

தலைஞாயிறு பேரூராட்சிக்குட்பட்ட திருமாளம் பகுதியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலக கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதையடுத்து இந்த கட்டிடம் தனியார் வாடகை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. 13 வருவாய் கிராமங்களுக்கு தலைஞாயிறு வருவாய் ஆய்வாளர் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.

13 கிராமங்களில் உள்ள இறப்பு, பிறப்பு சான்றிதழ் பெறவும், அனைத்து வகையான சான்றிதழ்கள் கையெழுத்து பெறவும் இந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு தான் செல்ல வேண்டும். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தலைஞாயிறு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது.

பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

இதையடுத்து கடந்த 1 ஆண்டுக்கு முன்பு புதிதாக வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் 13 வருவாய் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓராண்டுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்