நகராட்சி ஆணையாளர்களுடன் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆலோசனை

நகராட்சி ஆணையாளர்களுடன் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.;

Update:2023-07-06 01:34 IST

அம்பை:

அம்பை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்பை, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர்களிடம் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தனது அலுவலகத்தில் வைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது நகராட்சி பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்ட பணிகளின் தற்போதைய நிலை விவரங்களையும், மேலும் வரும் நிதி ஆண்டில் நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான பணிகளையும் கேட்டறிந்தார்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் அம்பை விஜய பாலாஜி, சேரன்மாதேவி மாரி செல்வம், நகர செயலாளர்கள் அம்பை அறிவழகன், விக்கிரமசிங்கபுரம் கண்ணன், மணிமுத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சிவன்பாபு, அம்பை நகராட்சி முன்னாள் துணை தலைவர் மாரிமுத்து, நகராட்சி கவுன்சிலர்கள் வேலுச்சாமி, சிவக்குமார், கிறாஸ் இமாகுலேட், ஒன்றிய துணை செயலாளர் பிராங்களின், வக்கீல்கள் சுரேஷ், ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்