விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

ராஜபாளையம், 

ராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பையா தெருவை சேர்ந்தவர் கற்பகம் (வயது 34). இவர் தையல் வேலை செய்து வந்தார். இவரது கணவர் நிறை பாண்டியன். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த கற்பகம் விஷத்தை குடித்தார். உடனே அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com