குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

நாங்குநேரி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
Published on

நாங்குநேரி:

நாங்குநேரி யூனியன் பூலம் ஊராட்சி பகுதி நான்கு வழிச்சாலையில் உள்ள ஆயநேரி கிராமத்தில் கடந்த 15 நாட்களும் மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் குடிநீர் வழங்க வலியுறுத்தி ஆயநேரி ரோட்டில் காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மூன்றடைப்பு போலீசார், சம்பந்தப்பட்ட துறையிடம் பேசி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com