விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

சேத்துப்பட்டு அருகே தொழிலாளி விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
Published on

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு அருகே தொழிலாளி விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

சேத்துப்பட்டை அடுத்த செம்மம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணு (வயது 63). கூலி தொழிலாளி. இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.

இதனால் விரக்தியடைந்த அவர் பூச்சி மருந்தை குடித்துவிட்டார். விஷம்உடலில் பரவவே மயக்க நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்து மண்ணுவை சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மண்ணு இறந்து விட்டார் இது குறித்து சேத்துப்பட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com