லாரியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

லாரியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
லாரியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
Published on

சிவகாசி, 

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த மாடசாமி மகன் சூர்யா (வயது 23). லாரி கிளீனர். இந்தநிலையில் சம்பவத்தன்று சிவகாசி அருகில் உள்ள சுக்கிரவார்பட்டி பேப்பர் மில்லுக்கு லோடு ஏற்றி வந்துள்ளனர். அப்போது லாரியின் மீது ஏறி நின்றபடி தார்பாய் கட்டி உள்ளார். அப்போது எதிர்பாராமல் லாரியில் இருந்து விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் தலையில் காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்த்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சூர்யாவின் தந்தை மாடசாமி மற்றும் உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சூர்யாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாடசாமி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com