பள்ளிபாளையத்தில்வாகனம் மோதி தொழிலாளி பலி

பள்ளிபாளையத்தில்வாகனம் மோதி தொழிலாளி பலி

Published on

பள்ளிபாளையம்

வெப்படை அடுத்த பச்சாபாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 35). கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன் வேலை முடிந்து தனது மொபட்டில் சங்ககிரியில் இருந்து கோவை செல்லும் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் வெப்படை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையில் போலீசார் ராஜேந்திரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகன குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com